வவுனியாவில் புத்தக பண்பாட்டு திருவிழா!

வவுனியா தமிழ் மாமன்றம் தனது 10 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி மாபெரும் புத்தக பண்பாட்டு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விழா வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இன்றும், நாளையும் (24.06 – 25.06) நடைபெறவுள்ளது.

வவுனியா சுயாதீன தமிழ் இளைஞர்கள் ஏற்பாட்டில் நடைபெறும் இவ் விழாவின்போது, உணவு விற்பனை கூடம், மற்றும் பனைசார் உற்பத்தி பொருட்களின் விற்பனையும் நடைபெறவுள்ளது.

மேலும் இதன்போது புத்தக விற்பனை கூடங்கள், சிறுவர்களுக்கான கதை சொல்லல் நிகழ்வுகள், புத்தக வாசிப்பு அனுபவப் பகிர்வுகள் மற்றும் உரையாடல்கள் என பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

வவுனியாவில் புத்தக பண்பாட்டு திருவிழா!

Social Share

Leave a Reply