நியூசிலாந்து, இலங்கை மகளிர் கிரிக்கெட் தொடர்

இலங்கை, நிஸியுஸிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டி தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த தொடரில் பங்குபற்றவுள்ள நியூசிலாந்து மகளிர் அணி நேற்று முன் தினம் இலங்கை வந்தடைந்துள்ளது. இன்று(24.06) அவர்கள் காலி சர்வதேசக் கிரிக்கட் மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

ஜூன் 30 மற்றும் ஜூலை 03 ஆம் திகதிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாது ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் நடைபெறவுள்ளன. காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

ஜூலை 08,10,12 ஆம் திகதிகளில் கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் 20-20 போட்டி தொடர் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியின் வீராங்கனைகள் பட்டியல் நேற்று(23.06) இலங்கை கிரிக்கெட்டினால் வெளியிடப்பட்டுள்ளது.

அணி விபரம்

  1. சாமரி அத்தப்பத்து – தலைவி
  2. விஷ்மி குணரத்ன
  3. ஹர்ஷிதா சமரவிக்ரம
  4. நிலக்ஷி டி சில்வா
  5. கவிஷா டில்ஹாரி
  6. அனுஷ்கா சஞ்சீவனி
  7. ஓஷதி ரணசிங்க
  8. காவ்யா கர்விந்தி
  9. சுகந்திகா குமாரி
  10. இனோகா ரணவீர
  11. உதேசிகா பிரபோதனி
  12. ஹன்சிமா கருணாரத்ன
  13. இனோஷி பெர்னாண்டோ
  14. இமேஷா துலானி
  15. ஹாசினி பெரேரா

Social Share

Leave a Reply