உலக நாயகன் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு திரைப்படம் நேற்று ரீ-ரிலீஸாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் உலகநாயகன், ஜோதிகா நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் 2006ம் ஆண்டு வெளியானது.
17 வருடம் கழித்து இந்த படம் மீண்டும் புது பொலிவுடன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாபா திரைப்படம் ரீ-ரிலீஸாகி தோல்வியை தழுவியது. எனினும் உலகநாயகனின் வேட்டையாடு விளையாடு திரைப்படம் சிறந்த வருவாய் ஈட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தப் படம் ஒரேநாளில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.