சீன ஆய்வகத்திலிருந்து COVID-19 பரவியது என்பதற்கான உறுதி செய்யப்பட்ட ஆதாரங்கள் எதுவும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்படவில்லை என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு அமெரிக்க அலுவலகம் (ODNI), வைரஸ் இயற்கையான மற்றும் ஆய்வக தோற்றம் கொண்டதாக நம்பக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிந்தது எனும் தகவலை சீனா கடுமையாக மறுப்பதும் முக்கிய காரணியாக காட்டப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் மற்றும் ஆய்வுகளில், இது விலங்குகளிடமிருந்து பரவியது என்பது அனுமானிக்கப்பட்ட போதிலும், அவை சீனாவிலிருந்து பரவியதாக உறுதி செய்யப்படவில்லை.
கோவிட்-19 உயிரியல் ரீதியாக தயாரிக்கப்படவில்லை என்பதை அனைத்து அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களும் ஒப்புக்கொள்கின்றன என இந்த புதிய அறிக்கை காட்டுகின்றன என்பதை சர்வதேச ஊடகங்கள் மேலும் கூறுகின்றன.