சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் படி 60 வகையான மருந்துகளின் விலைகள் இன்று (26.06) முதல் 16% குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 16% விலை குறைக்கப்படவுள்ளதுடன், டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 500 மில்லிகிராம் எடையுள்ள பராசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சத்தமாக கணக்கிடப்பட்டுள்ள அதேவேளை, இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2270 ரூபா 2 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
375 மில்லி கிராம் அமோக்ஸிசிலின் கிளாவுலினிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா 32 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.