பாராளுமன்றத்தை வரும் சனி (ஜுலை 01) அல்லது ஞாயிற்றுக்கிழமை (ஜுலை 02) இல் அவசரமாக கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடன் மறுசீரமைப்பு பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டியதை அவசர தேவையாக கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு ஜூன் 27ஆம் திகதி கூடி, இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பியதன் பின்னர், ஆளும் கட்சியின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் வரும் புதன்கிழமை (ஜூன் 28) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.