உலக வங்கி, இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அமைச்சரவை இன்று (27.06) ஒப்புதல் அளித்த பின் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
22 மில்லியன் மக்கத் தொகையை கொண்ட இலங்கையானது, கடந்த ஏழு தசாப்தங்களாக மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியானது இவ்வருடத்தில் 2 வீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், உலக வங்கி வழங்கும் நிதியுதவியானது மிகப்பெரிய பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்று நடைபெறுகின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கைக்கான வரவு-செலவு மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக 700 மில்லியன் டாலர்களை உலக வங்கி அங்கீகரிக்க வாய்ப்புள்ளதாக கடந்த வாரம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.