விடுமுறை நாட்களில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ளார்.
இதன்படி பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் 16 ஆம் நிலையியற் கட்டளைக்கு அமைய சபாநாயகர் சனிக்கிழமை (ஜுலை 01) காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தை கூட்டவுள்ளார்.
இதன்போது கடன் மறுசீரமைப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக கொழும்பிற்கு வெளியே பயணிக்க வேண்டாம் என ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முன்னதாக சபாநாயகர் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் இன்றைய தினம் (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அது வெள்ளிக்கிழமை (30) பாராளுமன்றத்திலும், பொது நிதிக் குழுவின் (கோப்குழு) முன்னிலையிலும் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.