இரவு நேர வீதி உணவு விற்பனை நிலையங்களில் சோதனை நடவடிக்கை!

கொழும்பு மாநகரசபையின் உணவுப் பரிசோதகர்கள் இரவு நேர வீதி உணவு விற்பனை நிலையங்களை சோதனை செய்யும் பணியை ஆரம்பித்துள்ளனர்.

பல இடங்களில் உண்பதற்கு உகந்ததல்லாத உணவுகளை விற்பனை செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் வெள்ளவத்தை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் உணவு பரிசோதகர்கள் கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை ஆகிய பகுதிகளுக்கு அண்மித்த காலி வீதியின் கரையோர வீதியிலுள்ள இரவு உணவு விற்பனை நிலையங்களையும் பரிசோதித்துள்ளனர்.

தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 6 கடைகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply