கட்டுநாயக்கவிலிருந்து ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமான நிலையம் நோக்கி நேற்றிரவு பயணித்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL- 454 விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமான பணியாளர்கள் மற்றும் 301 பயணிகளுடன் நேற்றிரவு 8.20க்கு பயணத்தை ஆரம்பித்த விமானம், 02 மணித்தியாலங்கள் 25 நிமிடங்களின் பின்னர் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த விமானத்தில் பயணித்த பயணிகளை மற்றுமொரு விமானத்தில் ஜப்பானுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.