அத்தியவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்!

தமது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 03 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

வெள்ளை பச்சை அரிசி (உள்ளூர்) 1Kg ரூ. 165.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (10.00 ருபாய் குறைக்கப்பட்டுள்ளது)

வெள்ளை நாட்டரிசி (உள்ளூர்) 1Kg ரூ. 168.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (07.00 ருபாய் குறைக்கப்பட்டுள்ளது)

சிவப்பு பச்சை அரிசி (உள்ளூர்) 1Kg ரூ. 137.00 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (02.00 ருபாய் குறைக்கப்பட்டுள்ளது)

இதன்படி, இன்று (30.06) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்த விளைய சலுகையை அனுபவித்திட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply