மெக்சிகோவில் கடும் வெப்பம் காரணமாக 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் வெப்பநிலையானது 50 டிகிரி செல்சியஸுக்கு (122 ஃபாரன்ஹீட்) அதிமாக பதிவாகி வருவதால் குறித்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மாதத்தின் முதல் மூன்று வார காலப்பகுதியில், இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு ஜுன் 18-24 வாரத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், கடுமையான வெப்பம் காரணமாக ஒருவர் மாத்திரமே உயிரிழந்திருந்தார். ஆனால் இவ்வாண்டில் 100 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 64 சதவீதம் எனக் கூறப்பட்டுள்ளது.