எரிபொருள் விலையில் மாற்றம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 92 ஒக்டேன் பெற்றோலுக்கான விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 328 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்புதிய விலை 365 ரூபாவாகும்.

மேலும் ஆட்டோ டீசல் விலை லிற்றருக்கு இரண்டு ரூபாவால் குறைக்கப்பட்டு 308 ரூபாவாகவும், சூப்பர் டீசலின் விலை லிற்றருக்கு 6 ரூபா அதிகரிக்கப்பட்டு, 346 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை மண்ணென்ணெய் 6 ரூபாவல் குறைக்கப்பட்டு 236 ரூபாவுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

Social Share

Leave a Reply