திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குச்சவெளி- வடலிக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஏ.அஸ்மி மற்றும் 21 வயதுடைய அஸ்கான் ஆகிய இருவரே துப்பாக்கிபிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.