இந்த வருடம் டெங்கு நோயினால் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் உணவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு இலங்கையில் 49,759 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.
மேல் மாகாணத்தில் மட்டும் 24,837 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.