கிரிக்கெட்டின் அதிரடி சாம்ராஜ்ஜியம் சரிந்ததா?மேற்கிந்திய தீவுகள் இன்றிய உலகக்கிண்ணம் களை கட்டுமா?
அதிரடி அணியாக சகல அணிகளையும் அதிரடியாக ஆக்ரோஷமாக பதம் பார்த்த மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறை உலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ளது. முதல் இரு உலகக்கிண்ணங்களது சம்பியன். மூன்றாவது உலகக்கிண்ணத்தில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான அணி. ஆனால் அதன் பின்னர் சரிவு கண்டு தடுமாறி வந்தது. 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவானார்கள். கடந்த முறை உலகக்கிண்ண தொடருக்கு தெரிவுகாண் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்று தெரிவாகியே உலகக்கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடியது. இம்முறை உலகக்கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துள்ளது.