பெண்களுக்கான அழகு நிலையங்களுக்கு தடை – தலிபான்கள் அதிரடி!

ஆப்கானிஸ்தானிலுள்ள பெங்களுக்கான அழகு நிலையங்களுக்கு தலிபான்கள் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது வரை காலமும் பெண்கள் பாடசாலை அல்லது கல்லூரிக்கு செல்வது, பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு இடங்களில் பணியாற்றுவதற்கு தடை போன்ற பல தடைகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது அழகு நிலைங்களுக்கான தடையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காபூல் மற்றும் நாட்டில் உள்ள ஏனைய மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காபூல் நகராட்சிக்கான நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், தலிபான் அரசின் புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தி பெண்கள் அழகு நிலையங்களில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தினால் பல பெண்கள் தங்கள் தொழிலை இழக்க நேரிடும் என்று சர்வதேச ஊடகங்கள் கணித்துள்ளதுடன், தலிபான்களின் இவ்வாறான தீர்மானங்கள் உலக நாடுகள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கி வருகின்றது.

Social Share

Leave a Reply