இம்மாதத்தில் பணவீக்கம் 7 சதவீதமாக குறையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி இன்று (ஜுலை 06) தெரிவித்துள்ளது.
பணவீக்கம் மேலும் குறைந்து நடுத்தர ஒற்றை இலக்க நிலை அல்லது நடுத்தர கால அளவில் நிலைபெறும் என்று எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் குறித்துப் பேசிய டாக்டர். ஹரிஷ்சந்திரா, பணவீக்கம் தொடரும் வேளையில், ஜூன் மாதத்திற்கான முக்கிய பணவீக்கம் 9.8% ஆக பதிவாகியுள்ளதாகவும், இது சில ஆண்டுகளில் முதல்முறையாக 10 வீத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் சாதகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.