அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற தருணம் பார்க்கும் ரஜபக்ஷ குடும்பத்தினர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் அனுசரனையுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.

பண்டாரகம பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ தேர்தல் அதிகாரத்தில் தாக்கம் செலுத்தும் எந்த சட்டத்திற்கும் 2/3 பெரும்பான்மை தேவை எனவும் இந்த அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை எனவும் கூறினார். 

அத்துடன் நாட்டில் சூழ்ச்சியான அரசியல் ஆரம்பமாகியுள்ளது எனவும், ஜனாதிபதியின் அனுசரனையுடன் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் தமது அதிகாரத்தை கையகப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

நிதி இல்லை என தேர்தலை நடத்தாமல் பிற்போட்டு திருட்டு தனமாக வந்த மேயர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டிக்கிறது எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Social Share

Leave a Reply