13ம் திகதி கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா விளாத்திக்குளம் வீதி தொடர்பில் பார்வையிட்டனர் பின்னர் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித எச்சங்கள் அகழும் பணி தொடர்பாக பல சந்தேகங்கள் எழுப்பியிருந்தேன்.
இது சம்மந்தமாக பல தரப்பினருடன் ஒரு கலந்துரையாடல் ஒன்றினை 13ம் திகதி முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடாத்தப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நிபுணத்துவம் உள்ளவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இப்படியான சாட்சியத்தை எவ்வாறு அணுகுவது, அதை எப்படி பாதுகாப்பது, பின்பற்ற வேண்டிய படிமுறைகள் என்ன என்பதை தெளிவுபடுத்திய பின் மிகுதி வேலைகளை செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.