மலையக பலக்லைக்கழ நிறுவல் தொடர்பிலான இறுதிக்கட்ட கலந்துரையாடல்

மலையக இளைஞர், யுவதிகளின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக இருந்த மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று கொட்டக்கலையில் இடம்பெற்றது.

அமைச்சர் ஜீவனின் அழைப்பின் பேரில் கொட்டகலைக்கு சென்ற கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கொட்டகலை ஆசிரியர் கலாசாலையை கேந்திரமாக கொண்டு பல்லைக்கழகத்தின் முதற்கட்ட தொகுதியினை நிறுவுவதற்கும், மேலும் நிர்வாக ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு செல்வதற்குமான இறுதிக்கட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பல்லைக்கழகத்தில் எந்தவிதமான பாடவிதானங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் மிக விரைவில் இலங்கை அரசு மற்றும் சர்வதேச ரீதியிலான உதவியுடன் இங்கு பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை நடைபெற்வுள்ளதாகவும் அமைச்சர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன், நுவரெலியா, கொட்டகலை, மஸ்கெலியா, அக்கரப்பத்தனை ஆகிய பிரதேச சபைகளுக்கான முன்னாள் தவிசாளர்களான ராஜமணி பிரசாத், வேலு யோகராஜ், ஜி.செண்பகவள்ளி, இராமன் கோபால், நுவரெலியா வலய கல்வி பணிப்பாளர், கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் பீடாதிபதி, விரிவுரையாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

Social Share

Leave a Reply