முன்னாள் இஸ்ரோ தலைவரான விஞ்ஞானி பத்ம விபூஷண் கலாநிதி கஸ்தூரிரங்கன் இலங்கை வருகை தந்திருந்த வேளையில் இன்று(10.07) அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் பெங்களூருக்கு விமானம் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
83 வயதான பிரபல விஞ்ஞானியான கஸ்தூரிரங்கன் 2020 ஆம் ஆண்டு முதல் தேசிய கல்வி கொள்கைக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் நாராயண ஹிருதய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர் தேவி ஷெட்டியினால் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாயமான கட்டத்தில் இல்லையெனவும், உடல் நலம் தேறி வருவதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஞ்ஞான துறை மற்றும் கல்வி துறை ஆகியவற்றுக்காக அவர் ஆற்றிவரும் சேவைக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.
விண்வெளி விஞ்ஞானியான ஸ்ரீ கஸ்தூரி ரங்கன் இலங்கையில் வைத்து மாரடைப்புக்குக் உள்ளாகியமை கவலையளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் செய்வதாக பெங்களூரு முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.