லங்கா T10 லீக் டிசம்பரில்

லங்கா T10 லீக் தொடர் டிசம்பர் மாதம் விளையாடப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் நடாத்த திட்டமிட்டிருந்த இந்த தொடர் டிசம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடாத்தப்படுமென மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்கு ஏற்ப டிசம்பர் மாதம் போட்டிகளை நடாத்துவதற்கு ஏற்ற காலமாக காணப்படுவதனால் போட்டிகள் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வீரர்களுடன் இணைந்து கலந்து விளையாடி தங்கள் திறமைகளை வெளிக்காட்ட இளைய வீரர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைவதாகவும், இந்த தொடர் வெற்றிகரமானதாக அமையுமெனவும் இலங்கை கிரிக்கெட் ஷம்மி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

6 ஆண்கள் அணிகள் பங்குபற்றும் தொடரும், 4 பெண்கள் அணியினர் பங்குபற்றும் தொடராகவும் இந்த தொடர் நடைபெறவுள்ளது. 6 வெளிநாட்டு வீரர்கள் அடங்கலாக 16 பேரடங்கிய வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இடம்பெறுவார்கள்.

Social Share

Leave a Reply