மகிந்தவுக்கு அதிகாரம் வழங்குவதற்கான வழியை மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், மகிந்த ராஜபக்ஷ நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் எனவும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன அதிகாரத்தைப் பெறும் எனவும் கூறினார்.
மேலும், மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நாட்டின் அதிகாரம் விரைவில் கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்த அவர், மகிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.