துருக்கியில் இருந்து சுற்றுலா வந்துள்ள பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியில் இருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற பேருந்தில் வைத்து குறித்த இராணுவ சிப்பாய் தவறாக நடந்துகொண்டதாக துருக்கிய சுற்றுலா பெண் ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா இராணுவ முகாமில் கடமையாற்றிய சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.