வயிறுவலிக்கு சிகிச்சை பெற சென்ற 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசியால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பொத்தப்பிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் வயிற்று வலி காரணமாக கெட்டப்பிட்டி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம் (11.10) அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குறித்த யுவதிக்கு தாதியொருவர் இரண்டு ஊசிகளை செலுத்தியுள்ளார். ஊசி மருந்து செலுத்திய சிறிது நேரத்திலேயே யுவதியின் உடல் நீலநிறமாக மாறியுள்ளது.
இதனையடுத்து 21 வயதான சாமோதி சந்தீபனி ஜயரத்ன என்ற யுவதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக நாட்டில் ஊசி செலுத்துவதால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.