சுகாதாரத்துறை பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான நடவடிக்கை!

மக்களுக்கு மருந்துகளை பெற்றுக் கொடுப்பதில் தாமதம் ஏற்படாதவாறு சுகாதார அமைச்சு உறுதி செய்ய வேண்டுமெனவும், நாட்டில் கிடைக்கும் அனைத்து மருந்து வகைகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை தேவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சினால் பராமரிக்கப்படும் விசேட இணையத்தளமானது ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மருந்துகளின் அளவு மற்றும் நாளாந்தம் கிடைக்கும் மொத்த மருந்துகளின் விபரங்களை வழங்க வேண்டும் எனவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்கும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் (NMRA) திருத்தம் தொடர்பான யோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதுள்ள நடைமுறையின் அடிப்படையில் மருந்துகளின் பற்றாக்குறையைத் தவிர்க்க, நாட்டில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கான மறு-அங்கீகார செயல்முறையை விரைவுபடுத்தவும் சுகாதார அதிகாரிகளுக்குத் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply