பேருந்தை கடத்த முயன்ற குண்டர்கள் குறித்து விசாரணை!

பேருந்தை கடத்தி தீவைக்க முயற்சித்த அரசியல்வாதிகளுக்கு சொந்தமான குண்டர்கள் குழுவை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹெட்டிபொல நகரில் பேருந்து சாரதி மற்றும் உதவியாளர் தாக்கப்பட்டு பேருந்தை கடத்த முற்பட்டதாகவும், பயணிகளின் தலையீட்டினால் அது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேருந்து மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அனுமதியுடன் இயங்குவதாகவும், பேருந்தை இயக்க விடாமல், கொலை மிரட்டல் விடுத்து கடத்த முயன்றதாகவும் வில்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நண்பருக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியில் செல்வதற்காகவே இந்த அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply