பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று இன்று (15.07) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெமோதர நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமபதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர், விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.