வவுனியா – தோணிக்கல் பகுதியில் நேற்று (14.07) கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் இலக்சபான வீதியில் பராமரிப்பு அற்ற காணியை துப்பரவு செய்த போது குறித்த குண்டு இனங்காணப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காணிக்கு விரைந்து சென்ற பொலிஸார் குண்டை மீட்டுள்ளதுடன், பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த கைக்குண்டு இன்னும் இயங்கு நிலையில் காணப்படுகின்றதா? அல்லது செயழிழந்த நிலையில் காணப்படுகின்றதா என்பதை ஆராய்ந்த பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பான முறையில் அதனை அங்கிருந்து அகற்றியுள்ளனர்.