தெஹிவளை பிரதேசத்தில் அனுமதியின்றி புனர்வாழ்வு நிலையம் ஒன்றை நடத்தி வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த புனர்வாழ்வு நிலையம் தெஹிவளை மல்வத்தை பகுதியில் ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் பதிவு இல்லாமல் இயங்கி வருகிறது.
மேற்படி நிலையத்தின் வசதிகள் மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும், சோதனையின் போது குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் 34 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மையம் ஒருவரிடமிருந்து மாதந்தோறும் 30,000 ரூபாய் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.