வெளிநாட்டில் வேலை பெற்றுத்துருவதாக கூறி ஏழு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட அதிகாரிகளினால் அவர் நேற்று (15.07) கைது செய்யப்பட்டுள்ளார்.
அகலவத்தை காவற்துறையில் கான்ஸ்டபிளாக கடமையாற்றும் 54 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இமதுவ, பத்தேமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
மஹகம, நாயதொல, அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.