குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த குழந்தை குறித்து முறைப்பாடு!

ஊசி போடப்பட்ட நிலையில் சுகவீனமடைந்ததாகக் கூறப்படும் நான்கு மாத பெண் குழந்தை  உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து குளிப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குளியாபிட்டிய கோமுகொமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி சுகவீனமடைந்த நிலையில், குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சளி வெளியேற்றம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ஊசி செலுத்தப்பட்டு சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply