வவுனியா கிரிக்கெட்டில் சாதனை

வவுனியாவில் நடைபெற்று வரும் வவுனியா மாவட்ட பிரிவு 03, 50 ஓவர்கள் கிரிக்கெட் தொடரில் இன்று(17.07) புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

வவுனியா தமிழ் ஜூனைட்டட் அணிக்கும் சுப்பர் ஸ்டார் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் தமிழ் ஜூனைட்டட் அணி 50 ஓவர்களில் 511 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இது வவுனியாவில் பெறப்பட்ட கூடுதலான ஓட்டங்களாகும். அந்த அணியின் வீரர் பரமசிவம்பிள்ளை நிஷாந்தன் 132 பந்துகளில் 263 ஓட்டங்களை விளாசித்தள்ளியுள்ளார். தனி நபர் ஒருவர் பெற்றுக் கொண்ட கூடுதலான ஓட்டங்களும் இதுவாகும்.

பதிலுக்கு துடுப்பாடிய சுப்பர் ஸ்டார் அணி 42 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து. இதன் காரணமாக தமிழ் ஜூனைட்டட் அணி 469 ஓட்டங்களினால் வெற்றி பெற்று பெரிய வெற்றி என்ற சாதனையையும் தனதாக்கியது. தமிழ் ஜூனைட்டட் அணியின் பந்துவீச்சில் ரஜீவ்காந்த் 6 விக்கெட்களையும், சந்தரு ரந்திமல் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply