புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள களனி பாலத்தில் மில்லியன் கண்கான ஆணிகள் திருடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இதனை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மறுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
விசேட கருவிகள் தேவைப்படுவதால் இந்த ஆணிகளை அவ்வளவு இலகுவாக அகற்ற முடியாது எனத் தெரிவித்த அமைச்சர் ஆணிகளை அகற்ற தேவையான கருவிகள் சம்பந்தப்பட்ட பொறியியல் நிறுவனங்களிடம் மாத்திரமே இருப்பதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வடிகால் அமைப்பின் சில GI குழாய்கள் PVC குழாய்கள், பாலத்துடன் இணைக்கப்பட்ட தொடர்பாடல் அறையின் குளிரூட்டும் அமைப்பின் சில பகுதிகள் மற்றும் பாலத்தில் பொருத்தப்பட்ட வண்ண பல்புகள் மட்டுமே திருடப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.