முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் 27ம் திகதி வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் தொடர்பிலேயே வாக்குமூலம் பெறவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின்போது ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஒரு தொகை பணம் மீட்கப்பட்டது. இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதற்கமைய நீதிமன்றத்தில் முன்னிலையாகிய இலஞ்ச ஊழல் குழு ஆணையாளர்கள் மேற்படி தெரிவித்துள்ளனர்.