டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டெங்கு அதி அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இது வரையான காலப்பகுதியில் 53,700 டெங்கு நோயாளர்களும், மேல் மாகாணத்தில் மட்டும் 26,702 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 36 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.

டெங்கு பரவலை இல்லாதொழிக்க பல்வேறு திட்டங்கள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படுவதுடன். பொது மக்களும் அவதானமாகவும், அலட்சியப்படுத்தாமலும் செயற்பா வேண்டும் என டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply