வவுனியாப் பல்கலைக்கழக 2வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வவுனியாப் பல்கலைக்கழக உடற்கல்வி அலகின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
29.07.2023 மற்றும் 30.07.2023 திகதிகளில் வவுனியா மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் வவுனியா பல்கலைக்கழகத்தில் நடாத்தப்படவிருக்கும் சதுரங்கப் போட்டிகளில் கீழுள்ள விதிமுறைகளின் கீழ் பங்குபற்ற முடியும்.
- போட்டிகள் யாவும் 7, 9, 11, 13, 15இ 17இ 19இ 21 வயதுக்குட்பட்ட, 21 வயதிற்கு மேற்பட்ட மற்றும் பல்கலைக்கழக ஆண்/பெண்களுக்கு என்று தனித்தனியாக நடத்தப்படும்.
- வயது 2023.01.01இல் இருந்து கணக்கிடப்படுகிறது.
7 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், பெண்கள் – 2016 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள்
9 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் – 2014-2015இல் பிறந்தவர்கள்
11 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் – 2012-2013இல் பிறந்தவர்கள்
13 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் – 2010-2011இல் பிறந்தவர்கள்
15 வயதுக்குட்பட்ட ஆண்,பெண்கள் – 2008-2009இல் பிறந்தவர்கள்
17 வயதுக்குட்பட்ட ஆண்,பெண்கள் – 2006-2007இல் பிறந்தவர்கள்
19 வயதுக்குட்பட்ட ஆண்,பெண்கள் – 2004-2005இல் பிறந்தவர்கள்
21 வயதுக்குட்பட்ட ஆண்,பெண்கள் – 2002-2003இல் பிறந்தவர்கள்
21 வயதிற்கு மேற்பட்ட ஆண்,பெண்கள் – 2001இற்கு முன் பிறந்தவர்கள்
- சர்வதேச சதுரங்க சங்கம் மற்றும் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் நடத்தப்படும் அதிகபட்ச சுற்றுகள் 6ஆகும், ஒவ்வொரு சுற்றும் 2 மணி நேரத்திற்கு மட்டுப்படுத்தப்படும். போட்டி சமநிலையில் முடிவடையுமாயின் பின்வரும் ஒழுங்கில் சமநிலை தகர்க்கப்பட்டு போட்டி முடிவு தீர்மானிக்கப்படும்.
• Direct Encounter points (applies only if all tied plays have played each other
• Buchholz Cut 1
• Buchholz
• Greater Number of Wins with Black Pieces
• Greater Number of Wins
- சதுரங்க போட்டிக்கான பதிவுகள் 2023 யூலை மாதம் 21ஆம் திகதி பி.ப.4.00 மணிக்கு முன் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி செய்து குறித்த கட்டணத்தை மக்கள் வங்கி, வவுனியா கிளையின் 040-1-003-8-1640087 என்ற கணக்கிலக்கத்திற்கு பணம் செலுத்திய ரசீதுடன் உடற்கல்வி அலகில் சமர்ப்பிக்க முடியும். அல்லது dpe@vau.ac.lk என்ற email Kfthpfமுகவரிக்கு அனுப்ப முடியும்.
- விளையாட்டு வீரர்கள் தங்கள் பிறந்த திகதியை உறுதிப்படுத்த அவர்களின் பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதியைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப்படிவத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்யவேண்டும். விளையாட்டு வீரர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் எழுதவேண்டும். மேலும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது, ஒவ்வொரு வயதினருக்கும் ஆண்கள் பெண்கள் எனவும் தனித்தனியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- போட்டிக் கட்டணம் ஒரு வீரருக்கு ரூ.500 ஆகும்.
- சதுரங்கப் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் பங்கேற்புக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.
- பாடசாலையில் விளையாட்டு வீரர்களுக்கு பொறுப்பாக ஆசிரியர் ஒருவர் இருப்பது கட்டாயம் என்பதோடு முறைப்பாடுகள் ஏதாவது இருப்பின் போட்டி முடிவடைந்து 30 நிமிடங்களுக்கு முன்னர் குழுவுக்கு பொறுப்பான போட்டி ஏற்பாட்டாளரிடம் மட்டுமே எழுத்துமூலமாக தெரிவிக்க முடியும்.
- ஒவ்வொரு விளையாட்டு வீரரும் பாடசாலை சீருடையை அணிந்து விளையாட வேண்டும். போட்டிகள் நடைபெறும் பல்கலைக்கழகம் வளாகத்தின் பாதுகாப்பு மற்றும் பௌதீக வளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடமையும் பொறுப்புமாகும்.
- பெற்றோர்கள் வருகைதருமிடத்து பல்கலைக்கழக விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு கட்டுப்பட்டு பொருத்தமான ஆடையுடன் வருதல் வேண்டும். இவ்விடயம் தொடர்பில் பெற்றோரையும் மாணவர்களையும் அறிவுறுத்துமாறு அதிபரிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
- போட்டித் தொடர்பான அனைத்து விடயங்களையும் போட்டி ஏற்பாட்டாளர் திரு.இ.சிவசேகரன் அவர்களின் 0767438318 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளமுடியும்.
சதுரங்க விளையாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தாங்கள் வழங்கும் ஆதரவிற்காக எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என வவுனியாப் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி அலகு, பணிப்பாளர், விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
போட்டி ஏற்பாட்டாளர்கள்
1)இ.சிவசேகரன் – 0767438318 2)கு.துஷ்யந்தி – 0771579712 3) ச.அருள்பிரியா – 0767353678 4)சூ.விமலேசன் – 0767597954
கீழுள்ள விண்ணப்பபடிவத்தை டவுன்லோட் செய்து விண்ணப்பிக்க முடியும்.