இந்தியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க குழுவினர் இந்தியா ஜனாதிபதி திரௌபதி முர்முவை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். ஜனாதிபதியுடன் இந்தியா சென்றுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான், வெளி விவாகர அமைச்சர் அலி சப்ரி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர ஆகியோருடன் ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரத்னாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.