லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இன்று மினி கூப்பர் கார் வாகன தொடரணி நிகழ்வு LPL ஏற்பாட்டாளர்கள் IPG குழுமத்தினால் நடாத்தப்பட்டது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையக முன்றலில் ஆர்மபித்த இந்த தொடரணி, காலி வீதியினூடாக கொழும்பு கோட்டை பகுதியினூடாக ஆர்.பிரேமதாச மைதானத்தை வந்தடைந்தது.
பல சிறிய ரக கார்கள் இந்த தொடரணியில் பங்குபற்றின. LPL தொடரை ஆரம்பித்து வைக்கும் ஒரு சிறப்பு நிகழ்வாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.