கொழும்பு முகத்துவாரம், கொச்சிக்கடை ஊடக கங்காரம பயணிக்கும் 145 மட்டக்குளி – கங்காரம பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்குளிய பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும் இரண்டு பேரூந்து சேவைகளை ஒன்றிணைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை சேவையில் ஈடுபட மாட்டோம் என குறித்த பேருந்து பாதையில் சேவையாற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.