அவிசாவளை சீதாவக்க ஏற்றுமதி தொழில் வலயத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைத்தொழில் வலயத்தினுள் உள்ள தொழிற்சாலையொன்றிலிருந்து இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது பொலிஸாரும் மற்றும் தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.