தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தம் அவரின் இல்லத்தில் இன்று (29.07) சந்தித்து கலந்துரையாடியதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதன்போது பல்வேறுப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதுடன், மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களை கௌரவிக்கும் முகமாக மலையகம் – 200 விழா தொடர்பிலும், மலையக கல்வி அபிவிருத்தி, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தமிழக அரசின் பங்களிப்பும் அவசியம் என்ற கோரிக்கையையும் இதன்போது நான் முன்வைத்தாக ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின் போது, இலங்கை தூதரகத்தின் துணைத் தூதர் வைத்தியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.