ஜப்பான் தூதுவரின் பதவி காலம் நிறைவு

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிராவின் பதவிக்காலம் நிறைவுக்கு வரவுள்ளது. நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வை இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.


ஆறு இலட்சம் அஸ்ட்ரா செனிக்கா தடுப்பூசிகளை ஜப்பானிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் கொவிட் தொற்றொழிப்பை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும், சுகியாமா அக்கிரா பல்வேறு வழிமுறைகளில் இலங்கைக்கு உதவியமைக்கும், சேவை வழங்கியமைக்கும் ஜனாதிபதி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வை பலப்படுத்திக்கொண்டு, தேவைப்படும் எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கான ஒத்துழைப்பு வழங்கத் தான் முயற்சிப்பதாக, ஜனாதிபதியிடம் ஜப்பானியத் தூதுவர் தெரிவித்தார்.

ஜப்பான் தூதுவரின் பதவி காலம் நிறைவு

Social Share

Leave a Reply