எரிபொருள் கையிருப்பை பராமரிப்பதில் சிக்கல்!

எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான கட்டளைகளை வழங்குமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களையும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தொடர்பான தற்போதைய நிலைவரங்களை டுவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ள காஞ்சன, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 101 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தபட்ச கையிருப்பை பராமரிக்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை திருத்தத்தை எதிர்பார்த்து, போதுமான அளவு இருப்பு வைத்திருக்க தேவையான எரிபொருளை ஆர்டர் செய்யவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம், இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் கீழ் எரிபொருள் இருப்புக்களை முறையாக பராமரிக்க தவறிய பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Social Share

Leave a Reply