மின்சார சபையை விற்பனை செய்வதே சிலரது நோக்கம்!

இலங்கை மின்சார சபைக்கு இவ்வருடம் 5000 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படும் என அதன் சிரேஷ்ட பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.

இரண்டு தடவைகள் மின்சாரக் கட்டணம் 75% அதிகரிக்கப்பட்ட போதிலும் நஷ்டம் ஏற்படும் எனவும், தற்போது, ​​டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து, நாட்டின் தேவையை தொடர்ந்து பூர்த்தி செய்ய, மின்சாரம் பெறுவதால், இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் பொறியியலார்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தவிர, நிலக்கரியின் விலை மற்றும் அவற்றை நாட்டிற்கு இறக்குமதி செய்யும் போது கப்பல் தாமதக் கட்டணத்தை செலுத்த வேண்டிய தேவையும் இந்த நஷ்டம் அதிகரிக்க காரணமாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதன் மூலம், சபையை திவாலாக்கி, நிறுவனங்களை விற்பனை செய்வதே சிலரது நோக்கமாக இருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

Social Share

Leave a Reply