‘சூர பாப்பா’ புகழ் லால் சரத் காலமானார்!

மூத்த நடன இயக்குனரும், பத்திரிகையாளரும், பிரபல நடிகருமான லால் சரத் குமார தனது 69வது வயதில் இன்று (01.08) காலை காலமானார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் சகோதர மொழியில் ஒளிபரப்பான ‘சூர பாப்பா’ கார்ட்டூனை தொகுத்து வழங்கியுள்ளதுடன், ஜூலியஸ் சீசர் தொடரை சிங்களத்தில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

கலையுலகில் பல சாதனை படைத்த லால் சரத் குமாரவிற்கு பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply