டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுக்கள்!

020 அமெரிக்க தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய முயன்றதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அந்நாட்டு நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.  

45 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உத்தியோகபூர்வ செயல்முறைக்கு இடையூறு செய்தல் மற்றும் சதி, சிவில் உரிமைகளுக்கு எதிரான சதி ஆகிய குற்றச்சாட்டுகள் டொனால்ட் டிரம்ப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. 

எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பான சதித்திட்டம் தொடர்பில் பெயர் தெரியாத மேலும் ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply