மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலப்பகுதியில் முந்நூறுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்பட்டிருந்தது. அதில் வாகன இறக்குமதி குறித்து அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் தற்போதைய அறிவிப்பிலும் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்படுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது.