யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவி ஒருவரின் சடலம் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
யாழில், அவரது தங்கும் அறையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் நேற்று (03.08) மாலை சடலமாக மீட்கப்பட்டதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தற்கொலைக்கு காதல் முறிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.